அனைவருக்கும் வணக்கம்.

நமது உறவுகள் செறிந்து வாழும் எல்லாம் ஊர்களுக்கும் நமது பார்க்கவன் முரசு சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்பொழுது "பார்க்கவன் முரசு" புதிய சந்தாதாரர்களை சேர்க்க முடிவு செய்துள்ளது.

நண்பர்களும் மின்னஞ்சல் / சாட்  / கமெண்ட் வழியாக பார்க்கவன் முரசை எங்கே வாங்கலாம் / எங்கு கிடைக்கும் என்பது போல கேள்விகளை எழுப்பி வந்தனர். வெளிநாடுகளில் வேலை செய்யும் ஒரு சில  நண்பர்கள் எங்கள் வீட்டு முகவரிக்கு ஒரு காப்பி அனுப்ப முடியாம என்று கோரிக்கை வைத்தனர். எல்லோருடைய கோரிக்கையும் ஏற்று தற்பொழுது பார்க்கவன் முரசு புதிய சந்தாதாரர்களை சேர்க்க இருக்கிறது.

புதியதாக சந்தாதாராக விருப்பம் / தேவை உள்ள நண்பர்கள் கீழே உள்ள சுட்டியை (link) கிளிக் செய்து தங்களுடைய சரியான / முழுமையான முகவரி மற்றும் இதர விபரங்களை பதியுங்கள். விபரங்கள் "பார்க்கவன் முரசு" குழுவினரால் சரிபார்க்கப்பட்டு விரைவில் அஞ்சல் வழியாக "பார்க்கவன் முரசு" அனுப்பிவைக்கப்படும்.

இதற்க்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தவேண்டாம்.

இதை கிளிக் பண்ணுங்க http://goo.gl/GHfERM

அன்புடன்
இராம. சிறீதரன்
பார்க்கவன் முரசு

வேலை தேடும் நண்பர்களுக்கு கவர் லெட்டர் எழுதுவது ஒரு மிகப்பெரிய பிரச்சனையை. நமது கவர் லெட்டர் தான் நமது ரேசும்-க்கு முன்பு படிப்பர்வர்களின் கையில் கிடைக்கும் என்பதால் கவர் லேட்டர் முக்கியத்துவம் பெருகிறது.

இந்த வலைதளத்தின் சில மாதிரி கவர் லெட்டர் உள்ளது. நண்பர்களுக்கு உதவும் என்பதால் ஷேர் பண்ணுறேன்.

நண்பர்களிடம் இதுபோல பயனுள்ள தகவல்கள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்க... அல்லது நீங்களே நமது பக்கத்தில் பகிருங்கள். நடிகை / நடிகர், சினிமா/டிவி தொடர்புடைய தகவல்களை பகிராமல் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை பகிருங்கள்.

Cover letter :
http://www.yourmomhatesthis.com/download-cover-letter-samples/

Resume:
http://careerride.com/Sample-CV.aspx

மறக்கக் கூடாத குலதெய்வ வழிபாடு!

இப்போதெல்லாம், முன்பு போலில்லை. சனப்பெருக்கம், வேலைவாய்ப்பு என்று கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி படையெடுப்பது அதிகரித்துவருகிறது. அப்படி வந்து இங்கேயே தங்கிவிடும்போது,அடுத்த இரு தலைமுறைகளில் யார் குலதெய்வம் என்றே நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது.

அதுசரி, யார் இந்த குலதெய்வம்? அப்படி அதை வணங்கியே ஆகவேண்டிய கட்டாயம் என்ன?

உங்கள் பூர்வீகக் கிராமத்தில், உங்கள் பாட்டன், முப்பாட்டன் முதற்கொண்டு பரம்பரை பரம்பரையாக யாரை வழிபட்டுவந்தார்களோ அதுவே உங்கள் குலதெய்வம். அது ஈசனோ அம்மனோ முருகனோ பிள்ளையாரோ, அல்லது வேறு ஏதும் கிராமதேவதைகளாகவோ கூட இருக்கலாம்.

வியர்க்க விறுவிறுக்க தரிசனவரிசையில் காத்திருந்து நீங்கள் தரிசித்த ஒரு பிரபலமான ஆலயத்தில் கிடைக்காத நிம்மதியும் மகிழ்ச்சியும், நகரிலிருந்து விலகி கிராமியச்சூழலில், அமைதியாக அமைந்திருக்கும் ஒரு அழகான கோயிலில் உங்களை முழுமையாக ஆட்கொள்ளலாம். அனுபவித்திருக்கிறீர்களா? 

உண்மையும் அதுதான்! இன்றைக்கெல்லாம் பணப்பேய் ஆட்சிபுரியும் பல பிரபலமான கோயில்களில் இறைசான்னித்தியமே இல்லாமல் போய்விட்டது. ஆனால், எங்கோ ஏரிக்கரையில், வயல்வெளிக்கு நடுவில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்திருக்கும் உங்கள் குலதெய்வக் கோயிலில், அந்த சான்னித்தியமும் திருவருளும் என்றுமே வற்றாது வாரி இறைந்துகொண்டே இருக்கும்.

அது ஒருவகையான முன்னோர் வழிபாடு. உங்கள் குலதெய்வத்தின் கதையை கேட்டுப்பாருங்கள். பெரும்பாலான குலதெய்வங்கள், உங்கள் குடும்பத்திற்காக, உங்கள் சமூகத்திற்காக, உங்கள் கிராமத்திற்காக தன்னையே தியாகம் செய்த மூதாதையர்கள் தான்! 

மனிதனாய் வாழ்ந்து தெய்வமாகிவிட்ட அவற்றின் பரம்பரைத் தொடர்ச்சி தான் உங்களின் டி.என்.ஏ இலும் ஜீனிலும் எங்கோ ஒளிந்திருக்கும். எனவே குலதெய்வம், உங்கள் மீது முழு உரிமை எடுத்து வஞ்சகமேயில்லாமல் வாரிவழங்கி அருள்புரியும். தாத்தா - பாட்டிமாருக்கு பேரக்குழந்தைகள் மீதுள்ள மாறாத பாசம் போல!

நம் சமயம் இறைவனை நாடுவதைத்தான் பேரின்பம் என்று போதிக்கிறது. நாமோ காசு, பணம், துட்டு, மணி என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்படி ஓடும் நமக்கு, நம்மைவிட வேகமாக ஓடோடி வந்து அருள்வன தான் குலதெய்வங்கள். ஏனென்றால், உலகியல் ஆசைகளை நிறைவேற்றும் கடப்பாடு உடையன தான் குலதெய்வங்களே . 

புதிது புதிதாக வீதியோரங்களில் முளைக்கும் ஆலயங்களையும், தாமே கடவுள் என்று கூறும் ஆன்மிக வியாபாரிகளையும் நாடி மனக்குறைகளைக் கொட்டுவதில் இன்று நாம் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறோம். ஒருதடவை சொந்த ஊருக்குப் போய், குலதெய்வத்திற்கு பொங்கல்வைத்துப் படையலிட்டு வந்து பாருங்கள்! நிச்சயம் உங்களில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

 

Nandri : https://www.facebook.com/gowriisankar.s?fref=photo

 

குலதெய்வ வழிபாடு 
***************************

குலதெய்வ வழிபாடு என்பது நமது சமுதாய மக்களின் கடமைகளில் ஒன்று. எல்லோரும் குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர் அவர் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவார்கள்.

கடந்த வாரம் நண்பர் ஒருவருடன் சாட் செய்துகொண்டு இருக்கும்பொழுது அவர் கூறினார். தான் தற்பொழுது சொந்த ஊரை விட்டு வெளியில் வேலை செய்வதால் எங்க குல தெய்வ கோவில் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. தங்களுக்கு / நண்பர்களுக்கு தெரிந்தால் தெரியபடுத்துங்கள் என்று கூறினார்.

இந்த குலதெய்வ வழிபாட்டை பற்றி நமது "பார்க்கவன் முரசு"வில் கூட தொடர்ச்சியாக ஒரு கட்டுரை வந்தது நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் எடுத்து போடுங்கள்.

இப்போது நாம் கூறுவது. நம் குழுமத்தில் 2000 அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர் அவர் குல தெய்வத்தின் பெயர், இருக்கும் ஊர், மாவட்டம் ஆகியவற்றை கூறுங்கள்.

ஒரே குலதெய்வ சாமியை கும்பிடும் இருவர் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள/நண்பர்களாக ஆக்கிக்கொள்ள உதவியாக இருக்கும்.

அன்புடன் 
குழும நண்பர்கள்.

நீங்கள் கூற வேண்டியது :

உங்கள் குலதெய்வத்தின் பெயர் :
இருக்கும் ஊர், மாவட்டம்.

வேறு எந்த தகவலும் வேண்டாம்.....

 

வரும் தேர்தலில் உங்களுடைய ஓட்டு இந்த கூட்டணிக்கு?

Our Google

Your browser does not support iframes.

மொத்தப் பக்கக்காட்சிகள்

Visitors

free counters

Menu

Menu By (C)Moopanar.com

Parkavan Murasu

Parkavan Murasu
Magazine for Moopanar

நன்றி (Thank you)

எங்கள் வலைப்பதிவை தாங்கள் பார்வையிட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களுடைய கருத்துகளையும் வலைபதிவில் செய்யவேண்டிய மாற்றங்களையும் மறக்காமல் எங்களுக்கு தெரியபடுத்துங்கள். நன்றி. Thank you very much for your visit to our blog. Kindly write your valuable comments and advice to imporve the blog. Thank you. E-mail : moopanar.community@gmail.com

Chat with us

Protect

myfreecopyright.com registered & protected

பார்வையிட்டவர்கள்

வந்து சென்ற உறவுகள்

மூப்பனார் (பார்க்கவகுலம்)

Our Twitter

Our Google Group

Google Groups
Subscribe to Parkavakulam Moopanar (பார்க்கவகுல மூப்பனார்) Community
Email:
Visit this group

Our Yahoo Group

Subscribe to moopanar_community

Powered by in.groups.yahoo.com