வாணர் குல அரசர்கள்.தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது..சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென்மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக."தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து குமரிவரை தமிழ் மன்னாக இருந்திருக்க வேண்டும்.இந்த தினைகளில் முதல் தினையான குறிஞ்சி(மலை) தினை ஆளும் சக்கரவர்த்தியாக மஹாபலியே திகழ்ந்திருக்கவேண்டும்.அருள்மிகு வேங்கட வாணன்(மலையன்)திருக்கோயில்மூலவர்வேங்கட வாணன்( மலையன்) , ஸ்ரீநிவாசன்உற்சவர்மாயக் கூத்தர்அம்மன்/தாயார்அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.தல விருட்சம்-தீர்த்தம்பெருங்குளத்தீர்த்தம்ஆகமம்/பூஜை-பழமை1000-2000 வருடங்களுக்கு முன்புராண பெயர்திருக்குளந்தைஊர்பெருங்குளம்மாவட்டம்தூத்துக்குடிமாநிலம்தமிழ்நாடுபாடியவர்கள்:மங்களாசாசனம்நம்மாழ்வார்கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன் மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக் கூத்தன் ஆடற் பறவை யுயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே.சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்வித்தகன்வேங்கட வாணன்உன்னை விளிக்கின்றகைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்திருவிளையாடற் புராணம் பாண்டியர் மரபின் வரிசைப் பட்டியலும், பல சோழ மன்னர் பெயர்களும் தருகின்றது. ஆனால் இவை நமக்குத் தெரிந்த வரலாற்றுச் செய்திகளுக்கு முரண்படுகின்றன. இலக்கியத்தால் அறியப்படும் செய்திகளுக்கும் மாறுபடுகின்றன. இந்நிலையில் அப்புராணம் நமக்குச் சிறிதும் பயன்படவில்லை.சேர, சோழ பாண்டியர் முத்தமிழரசர். அவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தமிழகத்தில் ஆண்டனர். இதை நாம்முதலில் ஒரே அரச மரபாயிருந்தது என்று மலையாள நாட்டு மக்கள்மரபும் இலக்கிய மரபும் குறிக்கின்றன. அதன்படி 'மாவலி' என்ற அரசன் தென்னாடு முழுவதையும் ஆண்டான்.அவன் சேரன் அல்லது பாண்டிய மரபைச் சார்ந்தவனாகவே இருக்கவேண்டும். அக்காலத்தில்தென்னாட்டில் ஒரே மொழி, பழந்தமிழ்தான் வழங்கிற்று. சாதி வேறுபாடு, உயர்வு தாழ்வுகள் இல்லை.கேரள 'ஐவேந்தர் கதை'யில் மாவலிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தார்கள். அவர்கள் பாண்டியன், சோழன், சேரன், ஆந்திரன், கன்னடன் என்பவர். ஐவரும் தந்தையுடன்முரண்பட்டனர். அத்துடன் ஒருவருடன் ஒருவர் போராடினர்.வெளிநாட்டுச் சூழ்ச்சிக்காரனான வாமனன் அவர்களைத் தூண்டிவிட்டான். மாவலி, புதல்வர்களின் மடமைக்கு வருந்தினான். அதே சமயம் அவன் போரையும் விரும்பவில்லை. ஆகவே நாட்டை ஐவருக்கும் பிரித்துக் கொடுத்துச் சென்றான். ஐந்து நாடும் ஐந்து மொழிநாடுகள் ஆயின. இது 'ஐவேந்தர் கதை' என கேரளாவிலும் ஆந்திராவிலும் இன்னும் வாய்மோழி கதையாக உள்ளது.சோழனும் பாண்டியனும் பிற்காலத்தில் ஒன்றுபட்டதனால், இரண்டு நாடுகளும் ஒரே செந்தமிழ் நாடு ஆயின. மற்றவை கொடுந்தமிழ் நாடுகளாயின.பாண்டியன் என்ற சொல்லின் பொருள் இந்த மலையாள நாட்டு மரபுக்கு வலிமை தருகிறது. 'பண்டு' என்றால் பழைமை. பாண்டியநாடு பழம் பெருநாடு என்று தமிழ் இலக்கியத்தில் போற்றப்படுகிறது.ஓணம் பண்டிகை.ஓணம் என்ற பண்டிகை பழந்தமிழர் பண்டிகையாகவே இருந்துள்ளது.இதைப்பற்றி பாண்டியர் புகழ் பாடியமதுரைக்காஞ்சியிலும்,சேரர் புகழ் பாடிய பதிற்று பத்திலும் கூறப்படுகின்றது.மக்கள் விரும்பி - விழைந்து - கொண்டாடப்படும் நாளே விழாவாகும். பழம்காலம் முதல் - பண்டு தொட்டு -கொண்டாடப்படும் விழா பண்டிகையாகின்றது.இவ்வகையில், ஆவணித்திங்கள் திருவோண நாளில் கேரள மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா ஓணம். உண்மையில் ஓண நன்னாள் எனப் பழந்தமிழரால் கொண்டாடப்பட்டதே இவ்விழா.கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஓணம் கொண்டாடப்படுவதாகக் கேரள மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று பத்துநாள் கொண்டாடப்படும்.இவ்விழாவின் பத்தாம் நாளாகிய ஓணத்தன்று யானைகளைச் சிறப்பாக அழகூட்டி நல்லுணவு படைத்து ஊர்வலமாக அழைத்து வருவது.இன்றைய கேரளம் என்பதே முந்தைய செந்தமிழ் வழங்கிய சேரநாடுதானே. தாங்கள் தமிழர் வழி வந்தவர் என்பதையும் தங்கள் மொழித் தமிழ்ச்சேய் மொழி என்பதையும் மறைத்து விடுவதால் உண்மையான வரலாறு அந்நாட்டு மக்களுக்கே தெரிவதில்லை. சேரநாட்டுச் சிறப்பையும் சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியச் சிறப்பையும் கேரளச்சிறப்பாகவும் மலையாளச் சிறப்பாகவும் சொல்வதுமே அவர்கள் வழக்கம். கேரளத்தினர், பிற தமிழ்ச் சேய் இனத்தவரைப் போல் தமிழ்ப் பகை உணர்வுடன் நடந்து கொள்வதால் தமிழ்வழிச் சிறப்பை மறைப்பதில் பெருமை கொள்கின்றனர்.சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட (மதுரை க்காஞ்சி 596-597)என்னும் அடிகள் மூலம், வண்டு மொய்க்கும் பூமாலைகள் அணிந்த யானைகளிடையே நடக்கும் போரினைக் குறிப்பிடுகிறார். எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓணநாளன்று யானையை அழகு படுத்துவது வழக்கமாக இருந்துள்ளது. ஓணம் ஏன் கொண்டாடப்படுகிறது எனக் கேரளர்கள் கூறுவதைப் பார்ப்போம். மாவலி (மாபலி)என்னும் சேர மன்னன் சிறப்பான முறையில் கேரளத்தைஆட்சி செய்து வந்தானாம். திருமாலே அவரிடம் வாமனனாகக் குள்ள வடிவம்பெற்று வந்து மூன்றடி மண் தருமமாகக் கேட்டாராம். (கொடுப்பது கொடை என்பது போல் தருவது தருமம் எனப்படும்.) மன்னன் கொடுக்க இசைந்ததும் பேருருவம் கொண்டு ஓரடியைப் பூமியிலும் மற்றோர் அடியை வானத்திலும் வைக்க மூன்றாம் அடி வைக்கஇடமில்லையாதலால் மன்னன் தன் தலையில் வைக்கச் சொன்னானாம். அவ்வாறே மன்னனின் தலையில் மூன்றாம்அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் தள்ளிவிட்டாராம். கொல்லப்பட்ட மன்னன் மாவலி தான் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதால் ஆண்டிற்கு ஒருமுறை அவர்களைச் சந்திக்க வரம் கேட்டானாம். திருமால் வரம் தந்தாராம். அவ்வாறு பாதாள உலகில் இருந்து ஆண்டு தோறும் வரும் மன்னன் மாவலி தங்கள் இல்லங்களுக்கும் வருவார் என நம்பி மக்கள் அழகுக் கோலங்கள் இட்டு அவரை வரவேற்கின்றனராம்.ஓணம் விழாவிற்குரிய கதை பகுத்தறிவிற்கு ஏற்றதல்ல என்பதால் அதனைக் கொண்டாட வேண்டா என எண்ண வேண்டா. அறிவுக்குப் பொருந்தாக் கதைகளைக் கற்பிக்காமல் இருந்தால் போதும். தொடக்கத்தில் ஆவணித் திங்களே ஆண்டுப்பிறப்பாக இருந்தது. அப்பொழுது ஆண்டுப்பிறப்பை வரவேற்கும் வகையில் ஓணநன்னாள் கொண்டாடப்பட்டது. பின்னர் தைத் திங்கள் ஆண்டுத் தொடக்கமாக மாறிய பின்பு ஓணம் பிற தமிழ்ப்பகுதிகளில் மறைந்து விட்டது. ஆனால், மாயோன் மேய காடுறை உலகம் என்கின்றார் அல்லவா தொல்காப்பியர்? மாயோன் மேய ஓண நல் நாள் என்றல்லவா சொல்லப்படுகின்றது. எனவே மாயோனுக்குரிய காட்டுலகம் சார்ந்த மலை நாடான சேரளத்தில் - கேரளத்தில் அவ்விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.மாவலி என்ற மலையர் குல சக்கரவர்த்தி திருமகன் சேர மைந்தனே.மாவலி ஒரு கொடிய அரக்கன் என்றும், திருமாலின் எதிரி என்றும், திருமாலின் வாமன அவதாரத்தால் கொன்றொழிக்கப்பட்டவன் என்றும் பாகவத புராணம் கூறுகிறது.ஆயினும் வியத்தகு முறையில் திருமால்பக்தர்களேயான திருவாங்கூர், கொச்சி அரசர்கள் இன்றளவும் தம்மை மாவலியின் மரபினர் என்று கூறுவதிலேயே பெருமை கொள்கின்றனர். இது மட்டுமோ? மலையாள நாட்டுப் பொதுமக்கள் மாவலியின் நல்லாட்சியின் நினைவாகவே தம் தேசீய சமுதாய விழாவாகிய திருவோணத்தை ஆண்டுதோறும் இன்றும் கொண்டாடி வருகின்றனர். தென்னாடெங்கும் ஒரே மொழி நாடாகக் கொண்டு ஆண்ட பேரரசன் என்றும் அவனைக் குறிக்கின்றனர். மலையாள நாடு மட்டுமின்றி பண்டைத் தமிழகம் முழுவதுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்விழாவைக் கொண்டாடியதாக அறிகிறோம்.வாமனத்தின் முடிவில் எடுக்கும் திருவிக்கிரமத் அவதாரத்தால்" என்று புரிந்து கொள்ள வேண்டும்.இந்தக் கதை தமிழ் இலக்கியங்களில் நெடுகவே பயின்று வந்திருக்கிறது. அப்படி ஒரு தாக்கம் ஏற்படவேண்டுமானால், அந்தத் தொன்மங்கள் இங்கு ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு உண்டு. "நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்" என்று குறிப்பிட்டுக் காடுகாண் காதை 11:148 ல் சொல்லப்படும்.இந்த அவதாரக் கதையில் வரும் மாவ(ல்)லி மன்னன் ஒரு சேர அரசனாய் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.(இன்றைக்கும் மாவல்லி ஒவ்வொரு ஓணத்தன்றும் கேரளத்தில் நினைவு கூறப்படுகிறான்.) அவன் அரக்கன் என்பது நிறம் கருதியே அன்றி வேறாய் இருக்க வாய்ப்பு இல்லை. அரக்கு நிறம் என்பதும் தமிழர் நிறம் தான். மாந்தளிர் நிறம் அரக்குத் தானே? சேரமான் மாவண் கோ, விளங்கில் மாவண் கடலன், மாவண் புல்லி, மாவண் கிள்ளி எனப் பல்வேறு அரசர்களும், வேந்தர்களும் சங்க காலத்தில் சொல்லப் படுகிறார்கள்.இந்த மா என்னும் முன்னொட்டு அவன் தமிழ் அரசன் என்று உணர்த்திவிடுகிறது. மாவல்லியின் தாத்தன் பெருகலாதன் என்பதும் கூடப் பெருஞ்சேரலாதன்>பெருங்கேரலாதன்>பெருங்கலாதன்>பெருகலாதன் என்ற திரிவில் அமையக் கூடிய பெயரே. அப்படி அய்யுறுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஆதன் என்னும் பெயரீறு சேர அரசர் பலருக்கும் இருந்திருக்கிறது. இரண்டு, மாவலியின் வழியில் வந்தவன், சோழன் மாவண் கிள்ளிக்குப் பெண் கொடுத்ததாக மணிமேகலைக் காவியத்தில் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதையில் (16:53-55)நீரிற் பெய்த மூரி வார்சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள் சீர்த்தி என்னும் திருத்தேவி என்று பதிவு செய்யப் படும்.இதே மாவண் கிள்ளியைச் செங்குட்டுவனின் மைத்துனன் என்று சிலம்பில் இளங்கோவடிகளும் பதிவு செய்வார். செங்குட்டுவனின் தாய் ஞாயிற்றுச் சோழன் என்று சிலம்பில் காணப்படும். ஆனால்,பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்திற்கான பதிகத்தில் "குடவர்கோன் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி மகள் ஈன்ற மகன்" என்று மணக்கிள்ளியாக "ஞாயிற்றுச் சோழன்" என்னும் செங்குட்டுவனின் தாய்வழித் தாத்தனை உணர்த்தும். இத்தகைய உறவு முறையால் மாவல்லி என்பவன் சேரனாய் இருக்கவே பெரிதும் வாய்ப்பு உண்டு.மலையமான் மற்றும் அதியமான்களும்.வேளிர் என்றும் "தன்நிழல் வாழ்நர் குடி" என்றும் அழைக்கப்படும் சேரர் குல மன்னர்களில் பாரி,மலையமான்,அதியமான்,ஓரி முதலிய பல குடிகள் மகாபலி வம்சத்தில் தோன்றியதாக தம் குறிப்புகளிலும்,கல்வெட்டுகளிலும்,செப்பேடுகளிலும் தெரிவித்துள்ளனர்.திருக்கோவிலூர் என்ற முள்ளூர் மலை ஆண்ட மலையமான்கள்.மலையமான் என்ற வார்த்தைக்கு சேரன் என்ற ஒரே அர்த்தம் தான் உண்டு.சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட மகாபலி என்ற சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்குமுற்பட்ட பாரம்பரியம் உண்டு.வல்வில் ஓரியை போரில் கொன்றவர் மலையமான் திருமுடிக்காரி. ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர்.அவர்களிடையேயான போர் பங்காளிச்சண்டையே,(வல்வில் ஓரியும் சேரனின் வம்சமே).எனவே மலையமான்,அதியமான்,ஓரி என்ற மூன்று அரசர்களும் மலையர் என்ற குடிப்பெயரையே கொண்டுள்ளனர்.இம்மூவரும் மஹாபலி வழி வந்தவர்கள் என தெளிவாக தெரிகிறது.மலையமான் மன்னர்களின் பட்டங்கள்.முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன்,மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான்,மலையமான்,சேதியராயன்,வன்னிய நாயகன்,பண்டரையர்,கோவலராயர்,வாணகோவரையன்,வாணராயர்,வாணவிச்சாதிரன்,காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரையதேவன்,நாடாழ்வான்வாணகோவரையர்,வாணராயர்,வாணவிச்சாதரர் ஆகிய பெயர்களில் பிற்கால மலையமான்கள்.வாண கோவ(ல்) அரையர்,வாண ராயன் இவ்விரு பெயர்களும் சேரர்களில் மலையமான்களுக்கு உண்டான சிறப்புப்பெயர் எனப்படும்.வாணம் எனில் உயர்ந்தது எனவும் மலை எனவும் பொருள்படும்.மேலும்மலையமான் மன்னர்கள் வாணகோவரையர்,வாணராயர்,வாணவிச்சாதரர் என்ற சிறப்புப் பெயர்கள் கொண்டு பல கல்வெட்டுகளில் அறியப்படுகின்றனர் . மலையமான்,சுருதிமான்களைப் பற்றிய கல்வெட்டுகளில் அநேகமாக இந்த சிறப்பு பட்டங்கள் காணப்படுவது அறியமுடிகிறது.வாணன்=மலையன் ராயன்=அரசன் வாணராயன்=மலையமான்(மலையமன்னர்)சேதிராயர் என்ற மலையமான்கள் பிற்கால சோழர்காலத்தில் வாணகோவரையர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர்.வானவன் எனில் மலை நாடு கொண்ட மலையனாகிய சேரன் என்றே நேரடியாகப் பொருள் தரும். பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் வட கயிலாயமுடைய நாயனார் கோவிலில் மலையமான்களாகிய வானகோவரைய சிற்றரசர்கள் தானம் (இறையிலி)கொடுத்தமை பற்றிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவையாவன: மலையன் வாணராயன். செம்பை ராசராச தேவனான வாணகோவரையன் வாணகோவரையன் செம்பைநாயகன் இந்நான்கும் மூன்றாம் ராஜராஜரின் 14,16ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள். ஆகவே தனித்தனி அரசர்கள் போல காணப்படும் இப்பெயர்கள் அனைத்தும் இப்பகுதியை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த செம்பை ஆழ்வாரான இராசராச தேவ வாணகோவரையர் என்ற ஒரே அரசனையே குறிப்பிடுகின்றன என்று அறிய வருகிறது. இவரையே ஆறகளூர்க் கல்வெட்டுகளும்,திருவண்ணாமலை கல்வெட்டு ஒன்றும் பொன்பரப்பிய வாணகோவரையர் என்று சிறப்பித்துக் கொண்டாடுகின்றன. மகதழற்பவன் மகதை நாடன் என்பது மலையமான் தெய்வீகராஜன் நரசிங்க உடையானின் சிறப்புப் பெயர். அவர் வழிவந்த மலையமான்களின் வம்சத்தினரும் மகதை நாடு என்னும் பகுதிகளையே ஆண்டு வந்தனர்.மேலும் சேலம்,தென்னாற்காடு,திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களின் ஒரு பகுதிகளையே மகதை நாடு என்றுகூறுகின்றனர். சேலம் தென்னாற்காடு,திருச்சி பகுதிகளில் நத்தமான், மலையமான்களைப் பற்றி வாணகோவரையர் வாணராயர் என்ற பெயரில் மேற்காணும் மலையன்,சேதிராயர் என்ற பெயர்களில் கல்வெட்டுகளையும்பெரம்பலூர் மற்றும் திருச்சியில் வாணராயன்,வாணவிச்சாதரர் என்ற பெயரில் சுருதிமான்களைப் பற்றிய கல்வெட்டுகளையும் அதிகமாக காணமுடியும்.உதாரணமாக கூத்தன் வாணராயன் திரணி சுருதிமான், நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,(பாடிகாவல் அதிகாரி என்பவர் வானகோவரையரே)ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்..மகதை என்று அன்றைக்கு வழங்கப்பட்ட பகுதிகளில் தான். மலையமான்கள் கல்வெட்டுகளும் ஆதாரமாக இதே (மகதநாடு)பகுதிகளில் உண்டு. வாணவிச்சாதரர் என்பார் மலையமானில் சுருதிமான் எனப்பொருள் படும். வாணகோவரையர் (மலையகோவலராயர்) மலையமானில்நத்தமான் எனப்பொருள்படும்.(நத்தமான்கள் என்போர் மலையரில் சிறப்பாக முல்லை நில அரசர்கள்) வாணராயர் மலையமான் என்றே நேரடியாக சுட்டும் பெயர்.வாணர் என்று மூவரும் பொதுவாக முன்னொட்டு பட்டப்பெயரோடு அழைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது. மகதழற்பவன் என்ற தெய்வீகன் மலையமானின் மக்களாகிய குலமென்னும் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்ற மூவரும் வாணகோவரையர்,வாணவிச்சாதிரர்,வாணராயர் ஆகிய மலையர்=வாணர் குல மரபினரே என்று கல்வெட்டுகள் போன்ற வரலாற்று தரவுகள் மூலம் அறிய முடிகிறது.வாணவராயர்,வல்லவராயர்,வானாதிராயர் என்ற பெயர்கொண்டதகடூர்அதியமான்கள்.அதியமான் மன்னர்களும் சேரரின் கிளை வழியினராக கூறப்படுகின்றனர். இவரை'சதயபுதோ--உன்மை பேசும் எழினி--பொய் சொல்லா மெய்யர்'என்று கூறினாலும் சதயபுதோ என்பது சாத்புரா-விந்திய மலையர்களை கூறுவதாக கூறுகின்றது.ஆனால் இவர் ஆண்டது 'சத்தியமங்கலம்' என்ற சேர மலை எல்லை பகுதி ஆதலால் இவர் சேர மலை மன்னர் என தெரிகின்றது. அதியமான்களும் மலையமான் என்ற பட்டங்களுடன் தான் முற்க்காலத்தில் என்ற பட்டத்தில் தான் ஆண்டுவந்துள்ளனர். பிற்காலத்திலும் அதியமான்கள் வானர் என்ற குலமாக தான் அடையாளப்படுத்தி சென்றுள்ளனர். அதியமானை பற்றிய குறிப்புகள் தகடூர் யாத்திரை என்ற நூலில் குறிப்புகளில் கானப்படுகின்றது. அதியமான் மகாபலி மன்னர் வழி வந்தவர் என தர்மபுரி வரலாறு நமக்கு கூறுகிறது.இவர் மகாபலியின் தாத்தா பிரகலாதன் என்ற பெருஞ்சேரலாதன் வழிவந்தாக பிரகலாத சரித்திரம் கூறுகின்றது.பிரகலாத சரித்திரத்தில் மலையமானும் அதியமானும் ஓரியும் முக்கிய மன்னர்களாக கூறப்படுகின்றது.எனவே அதியமானும் மகாபலி வந்த சேர மலையர் வம்சமே.பிற்கால அதியமான்கள் தம்மை 'வானர்' குல மன்னராக அடையாளப் படுத்தியுள்ளனர்.முதலாம் இராஜ ராஜ சோழன் காலத்தில் அதியமான் தலைநகரான 'ஜம்பை' என்ற தென்-ஆர்க்காடு பகுதியினை "மாறவன் நரசிம்மவர்மன்" என்ற மன்னன் ஆண்டதாக தெரிகின்றது(இராஜ ராஜ சோழன் வரலாறு).இன்றைய கொங்கு மண்டலத்தில் சமத்தூர் ஜமீன் வானவராயர்கள்,வல்லவராயர்கள் தம்மை அதியமான் வழிவந்தவர்கள் என கூறுகின்றனர்.அதியமான் என்ற பொய் சொல்ல மெய்யன் (அ)பொய்சொல்லா தேவன்பாண்டிய நாட்டில் வானாதிராயர்கள்.சோழர்களுக்கும்,பாண்டியர்களுக்கும் வானாதிராயர்களே மன்னர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள முடியரசு கொண்ட சாமாந்த நாயகர்களாக பனியாற்றியுள்ளனர்.இரண்டாம் குலோத்துங்க சோழன் பாண்டிய மன்னனை வென்று அவனது முடியை ஒரு வானாதிராயருக்கு சூட்டி பெருமை படுத்தியுள்ளான் என சிதம்பரம் கல்வெட்டு நமக்கு தெரிவிக்கிறது.அதைப்போல் மாறவர்ம சுந்தர பாண்டியன் திருவானைக்கால் கல்வெட்டில் மூன்றாம் ராஜேந்திரனின் முடியை ஒரு வானாதிராயருக்கு சூட்டி மகிழ்ந்தான் என கூறுகின்றது.இதைப்போல் சின்னமனூர் செப்பேட்டில் பாண்டியனின் சகல செல்வாக்குள்ள பாண்டியன் பிள்ளை என ஒருவானாதிராயரை செப்பேடு கண்ட பாண்டிய சின்னமனூர் கல்வெட்டு நமக்கு தெரிவிக்கிறது.அதில்"பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய சிங்க தேவன்" என கூறுகின்றது.இதில் இருந்து வானாதிராய மன்னர்கள் மிகுந்த செல்வாக்குள்ளவர்கள் என தெரிகின்றது.துருக்கர்களால் மதுரை சூரையாடப்பட்ட பின்பு குமார கம்பன்னாவை அழைத்து வந்து மதுரையை மீட்டது வானாதிராயர்களே.இறுதியாக லக்கன்ன நாயக்கன் என்ற மந்திரியால் குமார கம்பன்ன உடையாருக்கு பாண்டிய வாரிசுகளாக பிரகனப்படுத்தப்பட்டவர்கள் வானாதிராயர்களே.In 1451, it is said a Nayakkan named Lakkana brought to Madura four persons, who he declared to be the true Pandya stock, and set them, or one of them upon the throne. The names of these four are given as follows, namely :(1) Sundara Tol Maha Vilivanathi Rayar (Suntara tora mavili vanathi rayer)(2) Kaleiyar Somanar ( kaliyar somanar)(3) Anjatha Perumal ( Anjatha Perumal)(4) Tirumalei Maha Vilivanathi Rayar( mavili vanathi rayer)1.சுந்தர தோள் மாவலி வானாதிராயர்.2.கலியர் சோமனார்.3.அஞ்சாத பெருமாள்.4. திருமலை மாவலி வானாதிராயர்.இவர்கள் நால்வருக்கும் பந்தளம்,பூஞ்ஞார்,சின்னமனூர்,கானாடு பகுதிகள் தரப்பட்டதாக தெரிகின்றது.பந்தளம்.பந்தளம் ராஜா ராம வர்மா பனந்தாரான்(வானாதிராயன்).தம்மை பாண்டிய வழிதோன்றல்கள் என கூறுகின்றார்.இவர் பாண்டிய ஆட்சி முடிந்த பின்பு கேரள பகுதியான சபரிமலை அருகில் அரசு அமைத்து திருவிதாங்கூர்,கொச்சி அரசர்களிடம் திருமண உறவு பூண்டவர்.இவர்கள் பார்க்கவ கோத்திர சத்திரியர்கள் என மாவலியின் குருவான பார்க்கவர்(சுக்கிரன்) கோத்திரத்தை கொண்டவர்கள்.பூஞ்ஞார்.இவர் பூனையாற்று கோட்டை பாண்டியன் என தெரிகின்றது.இவர்தான் இன்றைய முல்லை பெரியாறு பகுதிக்கு உரியவர்.ஆனால் இவரிடம் அணைக்கு ஒப்பந்தம் போடுவதற்கு பதில் திருவிதாங்கூர் அரசரிடம் பென்னிக்குயிக் ஒப்பந்தம் செய்துவிட்டார்.இவரும் வானாதிராயர் என்ற பனந்தாரன்(சேரன்)தான். பந்தள மன்னரின் உறவினர்.சின்னமனூர்.இந்த பகுதியில் ஆதியில் ஒரு வானாதிராயர் ஆண்டார் அவர் பந்தள மன்னரிடம் திருமண உறவு பூண்டவர் என்பது சின்னமனூர்,பாலக்காடு கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் தெரிகின்றது.கானாடு(புதுக்கோட்டை,சிவகங்கை)இந்த பகுதியை சுந்தர தோள் வானாதிராயர் மானாமதுரை(வானாதிராய மதுரை) கோட்டை கட்டி கானாடு பகுதியை ஆண்டவர் என தெரிகின்றது.இவரால் திருப்பனி செய்யப்பட்ட காளையார்கோவில்,திருக்கோடுகுன்றம் மற்றும் மானாமதுரையில் அவர் கட்டிய வீர அழகர் கோயில் நமக்கு தெரிவிக்கின்றது.இவ்வாறு வானாதிராயர் பிற்காலம் வரையில் ஆண்டுள்ளனர் என நமக்கு தெரிகின்றது.இன்றைய கொச்சி திருவிதாங்கூர் பெருமாள் மன்னர்கள்.சேரமன்னனுக்கு பொன்னன் என்ற பெயர் உண்டு.அதாவது பிரகலாதன்(சேரலாதன்) பொன்திருமேனி என்று அழைக்கப்படுகின்றான்.சேரன் மட்டுமல்ல பாண்டியன் பசும்பூன்பாண்டியன்,பசும்பூன் சோழன்,பசும்பூன் பொறையன் என மூவேந்தரும் தன்னை "பொன் திருமேனியன்" என அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.இதைப்போல வானகோவரையர்களும்,வானாதிராயர்களும் பொன்பரப்பினான்,பொன்தின்னன்என்ற பட்டங்கள் உண்டு.பாண்டியனின் பட்டமான குறுவழுதி வானாதிராயர்களை குறிப்பது. வானக்கோவரையர் செம்பை ஆழ்வான்(கேரள பாலக்காடு )பகுதியை ஆண்டவன்.மகதை நாடாழ்வான்(மகோதையபுரம் ஆண்டவன்) எனசேரனின் பட்டங்கள் கொண்டவர்கள்.இன்றைய கொச்சி அரசர்கள் இன்றளவும் தம்மை மாவலியின் மரபினர் என்று கூறுவதிலேயே பெருமை கொள்கின்றனர். இது மட்டுமோ? மலையாள நாட்டுப் பொதுமக்கள் மாவலியின் நல்லாட்சியின் நினைவாகவேதம் தேசீய சமுதாய விழாவாகிய திருவோணத்தை ஆண்டுதோறும் இன்றும் கொண்டாடி வருகின்றனர். தென்னாடெங்கும் ஒரே மொழி நாடாகக் கொண்டு ஆண்ட பேரரசன் என்றும் அவனைக் குறிக்கின்றனர்.குலசேகரப்பெருமாள் மற்றும் மகாபலியின் சந்ததியராக தம்மை கூறுகின்றனர்.பெருமாள் பட்டத்தின் விளக்கம்.திருவிதாங்கூர் மன்னர் தம் முடிசூட்டும் விழாவை இரணிய வயல்(இரணியனை கொன்ற இடம்)என்ற இடத்தில்பொன் திருமேனி ஆனந்த பத்மனாப தாசனாகிய குலசேகர பெருமாள் என்று பட்டத்துடன் முடிசூட்டிக் கொள்கின்றனர்.இதற்கு அர்த்தமானது "விஷ்ணுவின் அவதாரமாகிய வாமனனின் திருவடியை திருமுடியாக கொண்ட குலசேகர பெருமாள் வம்சத்தினர் என்ற மாவலி மன்னனின் வம்ச வழி வந்த சேர இனத்தவன்" என்பதாகப் பெருமையிலே பட்டம் புனைகின்றனர்.சோழர் காலத்தில் மகாபலி வம்சத்தவர்கள் பல பட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.அவை1) சேரமுடியர்2)வானவரையர்3)வல்லவரையர்4)பழுவேட்டரையர்5) வானாதிராயர்6)மாவலியார்7) இலடராயர்8)மலைமான்(சேதிராயர்),9)வானகோவைரையர்,10)முனையதரையர்11)ஓயமானர்12) மழவராயர்13)அதியமான்14)மெய்யுடையார்வல்லவரையர்வாணகப்பாடி நாட்டை ஆண்ட வாணர் குலத்தவர். கொச்சிக்கு அருகிலுள்ள திருவல்லம் இவர்கள் தாயகம்,இராசராச சோழனின் மைத்துனரும் குந்தவைப் பிராட்டியாரின் கணவருமான வந்தியத்தேவனின் பட்டப்பெயர் - வல்லவராயர்.எனவே மஹாபலி நேரடியான வம்சம் வந்தவர்களாக தம்மைக் கூறும் திருவிதாங்கூர், கொச்சி,பந்தளம்,மலையமான் மன்னர்,அதியமான்,ஓரி,பாரி முதலிய அரசர்கள் கூற்றுகளிலும் பாண்டிய,சேர,சோழ மன்னர்களின் பெரும் மதிப்பிற்குரியவர்களாக வாழ்ந்தவர்கள் தான் மாவலி வானாதிராயர்கள்.எனவே மாவலி தான் சேர,சோழ,பாண்டிய மன்னரின் மூதாதையராக இந்த தமிழ்நாட்டை ஆண்டவனாக இருக்க வேண்டும்.எனவே மாவலியை வீழ்த்தியதாக கூறும் வாமன வம்சத்தவர்களான திபேத்திய பிராமணர்(நம்பூதிரி) மார்களில் கூற்றுப்படி வரும் பிராமண கதையளப்புகளில் தான் மாவலி அசுர மன்னனாக திரிக்கப்பட்டார்.ஆனால் அவர்தான் சேரராகவும் பாண்டியன்(உலகுடைய பெருமாள்) மற்றும் சோழனாகவும் வாழ்ந்தாக மதுரை காஞ்சி,பதிற்றுபத்து,பட்டினப்பாலை மூலமாக தெரிகின்றது.எனவே மகாபலி தான் தமிழ்குடிகளின் மன்னாதி மன்னனாக இருந்து ஆரியப் படையை முறியடித்து ஆதியில் தமிழ்நாட்டை காத்துள்ளார்கள்

வரும் தேர்தலில் உங்களுடைய ஓட்டு இந்த கூட்டணிக்கு?

Our Google

Your browser does not support iframes.

மொத்தப் பக்கக்காட்சிகள்

Visitors

free counters

Menu

Menu By (C)Moopanar.com

Parkavan Murasu

Parkavan Murasu
Magazine for Moopanar

நன்றி (Thank you)

எங்கள் வலைப்பதிவை தாங்கள் பார்வையிட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களுடைய கருத்துகளையும் வலைபதிவில் செய்யவேண்டிய மாற்றங்களையும் மறக்காமல் எங்களுக்கு தெரியபடுத்துங்கள். நன்றி. Thank you very much for your visit to our blog. Kindly write your valuable comments and advice to imporve the blog. Thank you. E-mail : moopanar.community@gmail.com

Chat with us

Protect

myfreecopyright.com registered & protected

பார்வையிட்டவர்கள்

வந்து சென்ற உறவுகள்

மூப்பனார் (பார்க்கவகுலம்)

Our Twitter

Our Google Group

Google Groups
Subscribe to Parkavakulam Moopanar (பார்க்கவகுல மூப்பனார்) Community
Email:
Visit this group

Our Yahoo Group

Subscribe to moopanar_community

Powered by in.groups.yahoo.com