ஜி. கே. மூப்பனார் | |
அரசியல் கட்சி | தமிழ் மாநில காங்கிரஸ் |
---|---|
பிறப்பு | ஆகஸ்ட் 19 1931 சுந்தரபெருமாள் கோவில், தமிழ்நாடு |
இறப்பு | ஆகஸ்ட் 30 2001(அகவை 70) சென்னை |
வாழ்க்கைத் துணை | கஸ்தூரி |
பிள்ளைகள் | 1 மகன் ஜி.கே.வாசன் , 1 மகள் |
இருப்பிடம் | சென்னை |
ஜி.கே.மூப்பனார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேசுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் 19-8-1931 ந்தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் கருப்பையா. இவர் தந்தையார் பெயர் கோவிந்தசாமி.இவர் மனைவி பெயர் கஸ்தூரி.
தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்குமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.
இவர் மகன் ஜி.கே.வாசன் தற்போது மத்திய அமைச்சராக பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜருக்கு பின் மக்கள் அபிமானம் பெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் இவர் ஒருவரே.