உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் நம் உறவுகளை இந்த வலைபதிவு வழியாக சந்திப்பதில் மிகவும் பெருமையடைகிறேன்.
பார்க்கவகுல மூப்பனார் சமூகத்தை சேர்ந்த மக்களை இணையம் வழியாக இணைப்பதற்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட வலைபதிவோ, வலைத்தளமோ இல்லை என்பது மிகப்பெரும் குறையாகவே இருந்து வந்தது. அந்த குறையை போக்கும் வகையில் இந்த வலைபதிவையும் அதனுடன் தொடர்புடைய Facebook Social Network, Twitter, Yahoo&Google Mailing Groups போன்றவற்றையும் ஆரம்பித்து உள்ளோம்.
இவை அனைத்தும் எந்த ஒரு அரசியல் கட்சி சார்பாக செயல்படவோ , தனி மனிதர் சார்பாக செயல்படவோ அல்லது நமது மக்களுக்காக உள்ள சங்களின் சார்பாக செயல்படவோ ஆரம்பிக்க படவில்லை என்பது உறுதி. அதே நேரத்தில் இது முழுக்க முழுக்க நமது மக்களின் நலனுக்காக, நமது மக்களின் பங்களிப்புடன் எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் இறுதி வரை செயல்படும் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.
இந்த வலைபதிவில் நமது சமுகத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் இணைத்து கொள்ளலாம். குறிப்பாக நமது சமுகத்தை சேர்ந்த படித்த இளைய சமுதாயத்தின் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். இது யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. இங்கு முழுமையான பேச்சு சுதந்திரமுண்டு. அதே நேரத்தில் தங்கள் எழுத்து யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும். தனிமனிதரை பற்றியோ, அரசியில் கட்சியை பற்றியோ தாக்கி பேசுவது கூடாது.
நமது உறவுகள் என்னை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்
அஞ்சல் முகவரி:
moopanar.community@gmail.com
moopanar.community@yahoo.com
பேஸ்புக்:
டுவிட்டர்:
வலைபதிவு :
அஞ்சல் குழுமங்கள் :
என்றும் அன்புடன்
கே .முருகானந்தம்
திருமானூர்.