அன்பு உறவுகள் அனைவருக்கும்,
வணக்கம்.
நமது சமூக மக்கள் பயன்பரும் வகையில் "வேலைவாய்ப்பு தகவல்கள்" என்ற புதிய பகுதியை இந்த புத்தாண்டு தொடக்கம் தொடங்குகிறோம்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு கல்வியும் அது சார்ந்த முன்னெடுப்பு பணிகளும் முக்கியம். குறிப்பாக நமது சமூகத்திற்கு இப்படிப்பட்ட பணிகள் மிகவும் முக்கியம். காரணம் தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக குழுக்களும் அவர்களுடைய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களையும், வர்த்தக நிறுவனங்களையும் மற்றும் பொதுசேவை நிறுவனங்களையும் நடத்திவருகிறார்கள். ஆனால் நமது சமூகத்திற்கு உதவுவதற்கு என்று அப்படி எந்த ஒரு நிறுவனமும் பெயர் சொல்லும் அளவில் இல்லை என்பது யாவரும் அறிந்ததே.
அந்த குறைகளை நம்மால் களைய முடியுமென்று நாங்கள் நம்பவில்லை. அதற்காக எல்லோரையும் போல சும்மா இருந்துவிடாமல் நம்மால் இயன்றதை செய்வோம் என்ற நோக்கத்தில் ஆரம்பமானது இந்த "வேலைவாய்ப்பு தகவல்கள்" என்ற பகுதி.
இந்த பகுதில் நமக்கு கிடைக்கும் உள்நாடு மற்றும் வெளிநாடு வேலைவாய்ப்பு தகவல்களை தர இருக்கிறோம். இணையத்தில் மற்றும் நண்பர்களிடம் இருந்து பெற்ற தகவல்களை நாங்கள் பிரசுரிக்கிறோம். மற்றபடி எந்த வகையிலும் தகவல்களின் உண்மைதன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல.
அன்புடன்
http://www.moopanarcommunity.blogspot.com/