


சென்னை, ஆக.9, 2010
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சௌந்தர்ராஜ் மூப்பனார் உடல்நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார்.
ஜி.கே. மூப்பனாரின் மைத்துனரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தாய்மாமனும், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர். சௌந்தர்ராஜன் மூப்பனார் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சௌந்தர்ராஜன் மூப்பனார் இன்று காலை 6 மணியளவில் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் சௌந்தர்ராஜன் மூப்பனார் உடல் அவரது சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணியளவில் சௌந்தர்ராஜன் மூப்பனார் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சௌந்தர்ராஜன் மூப்பனார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தாய்மாமன் சௌந்தரராஜன் மூப்பனார் திடீர் மறைவெய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து துயருறும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை, ஆக.9 (டிஎன்எஸ்) காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சௌந்தர்ராஜ் மூப்பனார் உடல்நலக்குறைவால் இன்று (ஆக.9) காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜி.கே. மூப்பனாரின் மைத்துனரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் மாமாவும், பாபநாசம் தொகுதி
முன்னாள் எம்எல்ஏவுமான ஆர். சௌந்தர்ராஜன் மூப்பனார் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சௌந்தர்ராஜன் மூப்பனார் இன்று காலை 6 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து அவரது உடலுக்கு புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பாராமலை, மாவட்ட தலைவர்கள் எம்.கோவிந்தசாமி, ராயபுரம் ஆர்.மனோ உள்ளிட்டகாங்கிரஸ் பிரமுகர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சௌந்தர்ராஜன் மூப்பனார் உடல் அவரது சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. நாளை (ஆக.10) காலை 10 மணியளவில் சௌந்தர்ராஜன் மூப்பனார் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். (டிஎன்எஸ்)
நன்றி: http://www.webdunia.com/
எங்கள் வலைப்பதிவை தாங்கள் பார்வையிட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களுடைய கருத்துகளையும் வலைபதிவில் செய்யவேண்டிய மாற்றங்களையும் மறக்காமல் எங்களுக்கு தெரியபடுத்துங்கள். நன்றி. Thank you very much for your visit to our blog. Kindly write your valuable comments and advice to imporve the blog. Thank you. E-mail : moopanar.community@gmail.com
|
Subscribe to Parkavakulam Moopanar (பார்க்கவகுல மூப்பனார்) Community |
Email: |
Visit this group |