மூப்பனார் நினைவுதினம்: ஸ்டாலின் அஞ்சலி
சென்னை, ஆக.30: மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 9-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியன், எம்எல்ஏக்கள் இ.எஸ்.எஸ்.ராமன், விடியல் சேகர், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் அஞ்சலி; ஜி.கே.வாசன் நலத்திட்ட உதவி வழங்கினார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம் பேட்டை காமராஜர் அரங்கம் பின்புறத்தில் உள்ள மூப் பனாரின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமாதியில் மூப்பனாரின் மகனும், மத்திய மந்திரியு மான ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு மூப்பனார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவரை ஜி.கே.வாசன் வர வேற்று அழைத்து சென்றார்.
இதனை தொடர்ந்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக் கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
எம்.எஸ்.அமீது தொகுத்த மாசில் வீணை மக்கள் தலைவர் மூப்பனார் என்ற புத்தகத்தை கவிஞர் வாலி வெளியிட ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.
123-வது வார்டு கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர் 150 மாணவ - மாணவிகளுக்கு இலவச சீருடையும், 108 பெண்களுக்கு புடவையும் வழங்கினார். இதை ஜி.கே. வாசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டி.யூ.சி.எஸ்.ராஜா, மீனவர் கலா, கல்யாணிசேகர், வேம்பாத் தாள், ராஜா, நந்து, கோபிநாத், கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மூப்பனார் நினைவு நாளையொட்டி சுயதொழில் தொடங்குவதற்காக 2 பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன் இதை வழங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா, மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அண்ணாநகர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் தணிகை மணி சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர்களை வழங்கினார். இதையும் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். இதில் சுரேஷ்ஆனந்த், கலையரசு, தரம்சந்த், மணியன், வேத மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய சென்னை மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தாஸ்பாண்டியன் ஏற்பாடு செய்த 10 சைக்கிள்களை ஜி.கே.வாசன் வழங்கினார்.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வி.பி.ஜவகர்பாபு ஏற்பாட்டில் 5 பேருக்கு தையல் மெஷின், 500 ஏழை பெண்களுக்கு புடவை, ஊனமுற்ற தொண்டர்களுக்கு இரு சக்கர வாகனம் போன்றவற்றை ஜி.கே.வாசன் வழங்கினார். எஸ். ஆர்.பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதே போல் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
காமராஜர் இல்லத்தில் இருந்து மூப்பனாரின் நினைவு ஜோதியை மூப்பனார் பேரவை தலைவர் எல்.கே.வெங்கட் ஊர்வலமாக மூப்பனார் நினைவிடத்துக்கு கொண்டு வந்தார். அதை ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார்.
மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முக்கிய பிரமுகர்கள் விவரம் வருமாறு:-
விடியல் சேகர், ராஜ சேகரன், ஞானசேகரன், கோவைதங்கம், மதுரை ராஜேந்திரன், எஸ்.ஜி.வினாயக மூர்த்தி, முக்தா சீனிவாசன், தேவா, கோபண்ணா, யுவராஜ், மங்கள்ராஜ், மயூரா ஜெயக்குமார், வளசரவாக்கம் நகரசபை தலைவர் இ.சி. சேகர், குமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கிளாடிஸ் லில்லி, துணை தலைவர் பாபு ஆண்டனி, ஜெ.புஷ்பராமன், குரோம்பேட்டை டி.என்.அசோகன், நெசப்பாக்கம் எம்.எஸ்.லிங்கம், லாசர், செங்கை பத்மநாபன், முனவர்பாஷா, முரளிகுமரன், மயிலை இரா.மணி, கார்டன் சரவணன், ப.மனோகரன், மயிலை சிவக்குமார், தீனன், மயிலை விவேக், கக்கன், இறைவன், கோகிலா, கராத்தே சந்துரு, தாம்பரம் வேணுகோபால், தாமோ தரன், டி.வி.துரைராஜ், ஜே.பி. சேகர், கலையரசன், எல்.சக்கரவர்த்தி, வேலுத் தேவர், விஜயன், தே.மு. தி.க. சார்பில் செந்தாமரைக் கண்ணன், யுவராஜ், வி.என்.ராஜன், இரா.சுரேஷ்குமார் உள்பட பலர் அஞ்சலி செலுத் தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் ஜி.ஆர்.வெங்கடேஷ் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஏழுமலை, சீனிவாசன், இத்ரீஸ், ரவி, அமல்குமார் பங்கேற்றனர்.
சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார் படத்துக்கு தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்தனர். இதில் யசோதா எம்.எல்.ஏ., லதா பிரியகுமார், ஐஸ்அவுஸ் தியாகு, சி.டி. மெய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதைரவி, கவுன் சிலர் லயோலா லாசர் ஏற்பாட்டில் 4 நலிந்த காங்கிரஸ் தொண்டர்கள் குடும்பத்துக்கு கிரைண்டர்கள் வழங்கப்பட்டன.
மேலும் 500 ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன.
அமிஞ்சிக்கரையில் மூப்பனார் உருவப்படத்துக்கு 5-வது மண்டல குழு தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏழு மலை, அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மூப்பனார் நினைவு நாளையொட்டி சரோஜினி வரதப்பன் மகளிர் சங்கம் சார்பில் 5 மகளிர் சுய உதவி குடும்ப வாரிசுகளுக்கு தலா ரூ. 30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1.5 லட்சம் நிதி உதவியை ஜி.கே.வாசன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அந்த தொண்டு நிறுவன தலைவர் ராணி ராஜேந்திரன் செய்திருந்தார்.
சுய தொழில் தொடங்க 2 பேருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரமும் இந்த தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மூப்பனார் பேரவை வக்கீல் பிரிவு மாநில தலைவர் என்.செல்வராஜன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.வெங்கடேன், என்.துரை சாமி, பாலமுருகன், வினோத் குமார், பழனி, முத்துராஜ், ஏங்கல்ஸ், மூப்பனார் பேரவை மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.பிரசாத், அரசம்பட்டி அரங்கநாதன், கிருஷ்ணகிரி ராஜாவெங்கட் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூப்பனார் நினைவிடத்தில் 5 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்தை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். இதில் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., ஞானதேசிகன் எம்.பி., ராயபுரம் மனோ, கவுன்சிலர்கள் ரூப்சந்தர், பாபு சுந்தரம், கிருபாகரன், ஜிம் பாபு, ஆர்.கே.நகர் செல்வம், அகரம் ஜி.லோகேஷ் கலந்து கொண்டனர்.
சென்னை பிராட்வேயில் உள்ள மரியாலயா அனாதை இல்லத்தில் 400 சிறுவர் -சிறுமிகளுக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், நடிகருமான சி.ராஜ்குமார் உணவு மற்றும் இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் லோகானந்தன், கபூர்அகமது ஆகியோர் பங்கேற்றனர்.
Rengarajan G சொன்னது…
நான் நினைத்துகொண்டிருந்தேன்..நீங்கள் செயல் படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள்