அரியலூர், ஜுன் 21: அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் செட்டிநாடு சிமென்ட் ஆலை அருகே கட்டப்பட்டுள்ள அருணாசலா நர்சரி, பிரைமரி பள்ளித் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
சுரேஷ் மூப்பனார் தலைமை வகித்தார். ஜி. ரங்கசாமி மூப்பனார் பள்ளியைத் திறந்து வைத்தப் பேசுகையில், கிராமங்களில் உள்ள குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பள்ளி திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
விழாவில் திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராசன், செட்டிநாடு சிமென்ட் ஆலையைச் சேர்ந்த கணேசன், சிட்டி யூனியன் வங்கித் தலைவர் பாலசுப்பிரமணியன், சம்பத் மூப்பனார், சந்திரசேகர் மூப்பனார் ஆகியோர் வாழ்த்தினர்.
விழாவில் பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
கீழப்பழூர் அருணாசலா சிறப்பு மருத்துவமனை உரிமையாளர்கள் மருத்துவர் அருணாசலம், ரமேஷ்கண்ணன், அருணாசலா கேட்டரிங் கல்லூரி உரிமையாளர் கணேஸ் ஆகியோர் வரவேற்றனர்.
நிறைவில், பள்ளித் தாளாளர் பிரதீபா நன்றி கூறினார்.
காந்தி பனங்கூர் சொன்னது…
நம்ம பகுதி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக அமைந்தால் நன்றாக இருக்கும்.