இந்திய கப்பல் படை பணிகளுக்கு ஆள்கள் சேர்ப்பு
அரியலூர், டிச. 20: இந்திய கப்பல் படை பணிகளுக்கு ஆள்கள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்காக சென்னை, கோவை, அரக்கோணம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய கப்பல் படையில் முதுநிலையில் உள்ள இரண்டாம் நிலை பணிகளுக்கான கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 -வில் கணிதம், பௌதீகத்தை பாடமாகக் கொண்டு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு பாடம் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
1990 ஆகஸ்ட் 1-க்கும் 1994, ஜூலை 31 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவராகஇருத்தல் வேண்டும். இந்தப் பணிக்கு டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய கப்பல் படையில் ஆர்ட்டிபைஸர் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 -வில் கணிதம், பௌதீகத்தை பாடமாகக் கொண்டு 55 சதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1991, ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கும், 1994, ஜூலை 31 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
இந்திய கப்பல் படையில்மெட்ரிக் ரெக்ரூட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 1990, அக்டோபர் 1 ஆம் தேதிக்கும், 1994, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
இந்திய கப்பல் படையில் மெட்ரிக் வரை பயிலாதோருக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 6 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
1990,அக்டோபர் 1 ஆம் தேதிக்கும், 1994, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு 2011, ஜனவரி15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான விரிவான விளம்பரம் 2010, நவம்பர் 27, டிசம்பர் 25 ஆம் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கானஎழுத்துத் தேர்வு 2011, மார்ச், ஏப்ரல் மாதங்களில் சென்னை, கோவை, அரக்கோணம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது என்றார் அவர்.