குலதெய்வ வழிபாடு
***************************
குலதெய்வ வழிபாடு என்பது நமது சமுதாய மக்களின் கடமைகளில் ஒன்று. எல்லோரும் குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர் அவர் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவார்கள்.
கடந்த வாரம் நண்பர் ஒருவருடன் சாட் செய்துகொண்டு இருக்கும்பொழுது அவர் கூறினார். தான் தற்பொழுது சொந்த ஊரை விட்டு வெளியில் வேலை செய்வதால் எங்க குல தெய்வ கோவில் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. தங்களுக்கு / நண்பர்களுக்கு தெரிந்தால் தெரியபடுத்துங்கள் என்று கூறினார்.
இந்த குலதெய்வ வழிபாட்டை பற்றி நமது "பார்க்கவன் முரசு"வில் கூட தொடர்ச்சியாக ஒரு கட்டுரை வந்தது நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் எடுத்து போடுங்கள்.
இப்போது நாம் கூறுவது. நம் குழுமத்தில் 2000 அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர் அவர் குல தெய்வத்தின் பெயர், இருக்கும் ஊர், மாவட்டம் ஆகியவற்றை கூறுங்கள்.
ஒரே குலதெய்வ சாமியை கும்பிடும் இருவர் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள/நண்பர்களாக ஆக்கிக்கொள்ள உதவியாக இருக்கும்.
அன்புடன்
குழும நண்பர்கள்.
நீங்கள் கூற வேண்டியது :
உங்கள் குலதெய்வத்தின் பெயர் :
இருக்கும் ஊர், மாவட்டம்.
வேறு எந்த தகவலும் வேண்டாம்.....
Unknown சொன்னது…
My great granparents came and settled down in Malaysia. I'm Malayaman Udaiyar. Our family also lost connection with relatives in India. Can anyone help us to find our Kuladeivam? Thank you very much.