அரியலூர்: அரியலூரில் நடந்த தமிழ்நாடு பார்க்கவகுல மூப்பனார் சங்க முப்பெரும் விழாவுக்கு, சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.

 

மாவட்ட செயலாளர் நானாங்கூர் சம்பந்தம் வரவேற்றார்.சங்கத்தின் 26வது ஆண்டு மலரை வெளியிட்டு, மாநில, மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கி, தேசிய மற்றும் மாநில அளவில் விருது பெற்றவர்களை பாராட்டி சால்வை அணிவித்து, சங்கத்தின் மாநில தலைவர் இளம்வழுதி பேசினார்.

 

கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள ஒட்டுமொத்த பார்க்கவ குல சமுதாயத்தை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

கல்வி கடன் வழங்குவது மற்றும் விவசாய கடன் வழங்குவதில் பொதுமக்களை அலைக்கழித்து அலைய விடுவதுடன், கிராமபுற முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும், சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்களின் அலட்சிய போக்கை வன்மையாக கண்டிப்பது.மருதையாறு அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ராமு, ஒன்றிய தலைவர்கள் ராஜாங்கம், கரிகாலன், குமரேசன், வக்கீல் செல்வராஜ், வல்லக்குளம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாநில பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.

 

Nandri : www.dinamalar.com

 

 


அன்பு உறவுகளுக்கு,


வணக்கம்.

கடந்த வாரம் இணையத்தில் மூப்பனார் தொடர்பான செய்திகளை தேடிக்கொண்டு இருந்தபோது.கீழ்க்கண்ட தகவல்கள் கிடைத்தது. படிக்கும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது. அந்த தகவல்களை தங்கள் அனைவரின் பார்வைக்காக நமது வலைப்பதில் பதிவிடுகிறேன்.

அன்புடன்
வலைபதிவு குழுமம்

பேச்சு:தமிழ் ஆவண நிகழ்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

"தமிழைப் பொறுத்தவரை .கே. செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படம் முக்கியமானது. 1937 முதல் 1942 வரை செட்டியார் எடுத்த இந்தப்படமே இந்திய அளவிலும் முதல் முழுமையான ஆவணப்படம்னு சொல்லலாம். இந்தப் படத்துக்காக வெளிநாடுகள் போய் பல தலைவர்களைப் பார்த்து அவர்களை பேட்டி கண்டிருக்கிறார். இந்தப் படத்தோட ஆங்கில பிரதிதான் நம்மகிட்ட இருக்கு. தமிழ் மூலம் இதுவரை கிடைக்கலை. பிரன்சில் படித்த .வி. பதி 1937-ல் 'இந்தியன் பேந்தர்' ங்கிற ஆவணப்படம் எடுத்தார். ஜெர்மனை சேர்ந்த பால் சீசிஸ் என்பவர்தான் இந்தியாவில் ஆவணப்படம் உருவாக ஆரம்பகாலத்தில் காரணமாக இருந்திருக்கிறார். இவர் .வி. பதியோட நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தஞ்சாவூரில் நிறைய வெள்ளைக்காரங்க இருந்திருக்காங்க. அவங்க மூலமா புகைப்பட கலை தஞ்சாவூர்வாசிகளுக்கு பரிட்சயமாகியிருக்கு. அதில் முக்கியமானவர் ஆபிரஹாம் பண்டிதர். 1850- யிருந்து 1917 வரை இவர் பல்வேறு ஆவணப்படங்களை எடுத்திருக்கார். இவர் தன்னோட மகன் ஜோதிபாண்டியனை அப்போதே ஜெர்மனிக்கு கேமரா பற்றி படிக்க அனுப்பி வச்சிருக்கார். இவர்கிட்ட புகைப்பட கலையை கற்றுகிட்டவர் மருதப்ப மூப்பனார். இவர் விமானம் தரையிறங்குகிறதையெல்லாம் படமாக்கியிருக்கார். 1905-ல் டெல்லியில் 5-ம் ஜார்ஜ் மன்னனுக்கு விழா நடத்தியபோது அதை இவர் படமெடுத்திருக்கார். 1910-களில் சென்னை வேப்பேரியைச் சேர்ந்த ஜோசப்ங்கிறவர் கீரிப்பிள்ளை சண்டை மாதிரியான விஷயங்களை படமெடுத்து பணத்துக்கு வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்றிருக்கிறார். இவையெல்லாம் வாய்மொழி வரலாறாகதான் இருக்கு. ஆவணப்படங்கள் எதுவும் இப்போது நம்மகிட்ட இல்லை. .கே. செட்டியாரின் காந்தி பற்றிய படம்தான் நம்மிடம் இருக்கும் பழமையான முழுமையான ஆவணப்படம். * ஆவணப்படுத்துவது என்பது தமிழர்களிடம் அரிதாக காணப்படும் விஷயம். இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். ஆவணப்பட விஷயங்களில் நாம் இழந்தவை பற்றி கூற முடியுமா? தமிழில் வண்ண திரைப்படம் 1956-ல் தான் அறிமுகமாகுது. அதுக்கு முன்பே வண்ணத்தில் ஆவணப்படம் எடுத்திருக்காங்க. நான் நண்பர் ஒருவரோட வீட்டுக்கு போனபோது அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி நிறைய ஆவணங்கள் சேர்த்து வைத்திருந்தார். அதில் பர்மா விஜயம்ங்கிற பெயர்ல ஒரு படச்சுருள் இருந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பர்மா போனதை யாரோ படம் எடுத்திருக்காங்க. 1952-ல் எடுக்கப்பட்ட அந்தப் படம் வண்ணத்தில் இருந்தது. படம் நன்றாக இருந்தாலும் ஆடியோ நாசமாகியிருந்தது. ஒலி கிடையாது. அதேமாதிரி பெரியாரோட ஒருநாள் வாழ்க்கையை 'செம்மீன்' இயக்குனர் ராமு காரியத் ஆவணப்படமா எடுத்திருக்கார். ராமு காரியத் கேரளாவின் வைக்கத்தை சேர்ந்தவர். பெரியார் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியதால் பெரியார் மேல அவருக்கு ஓர் ஈடுபாடு. அந்த ஆவணப்படத்தை தேடி தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பல இடங்களுக்கு அலைஞ்சும் பலன் பூஜ்ஜியம் தான். படச்சுருள் எங்கே போனதுன்னே தெரியலை. மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தன்னையே ஆவணப்படமா எடுத்திருக்கார். அவர் ஸ்டுடியோவுக்குள் நுழையுறது, வேலையாட்களுக்கு வேலையை பிரிச்சு கொடுப்பது, ஸ்டுடியோ லைட்ஸ் ஆன் செய்வதுனு அவரோட ஸ்டுடியோ வேலைகளை படமாக்கியிருக்கார். கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடை ஈழத்தைச் சேர்ந்த சுவாமி சேவியர் தனிநாயகம் அடிகள் படமெடுத்தார். இவையெல்லாம் இன்றைக்கு நம்ம கையில் இல்லை. நாம ஆவணப்படுத்தாமல் சரித்திரத்தில் நழுவவிட்டவை இவை. முழுநீள சினிமாவில் ஆவணப்படங்களை சேர்த்து திரையிடுற வழக்கம் முன்பு இருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸின் 'கஞ்சன்' படத்தில் காந்தி பழனி கோயிலுக்கு வந்ததை படமெடுத்து படத்தோடு இணைச்சு திரையிட்டாங்க. விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.. மாநாடை படமெடுத்து, அதனை தான் பார்ப்பதுபோல் 'தங்கரத்னம்' படத்தில் எஸ்.எஸ். ஆர். பயன்படுத்தியிருப்பார்."[1]

Nandri : http://ta.wikipedia.org/

மேலும் சலனப்பட பிலிம்களை உருத்துலக்கும் பணிகள், படியெடுத்தல் இன்னும் பிற தொழில் நுட்பங்களை முழுமையாகக்; கற்றார். பூனேவில் சில துண்டுப் படங்களைப் படம்பிடித்து ஸ்டூவர்ட் அரங்கத்திலேயே திரையிட்டு அவரது பாராட்டுதலைப் பெற்றார்.

சென்னை திரும்பிய நடராஜ முதலியார் 1917- ஆம் ஆண்டு "இந்தியா" பிலிம் கம்பெனி என்ற பெயரில் சலனப் படத் தயாரிப்பகம் ஒன்றைத்; தொடங்கினார். இக்காலகட்டத்தில் தஞ்சாவூர்மாவட்டம் திருவையாறைச் சார்ந்த திரு.மருதப்ப மூப்பனார் என்பவர், இங்கிலாந்துக்குச் சென்று புகைப்படக் கலையைக் கற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.

அவர் தன்னிடமிருந்த வில்லியம்சன் புகைப்படக் கருவியையும், உருத்துலக்கும் கருவியையும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த நடராஜ முதலியார் அவரிடமிருந்து ரூ.1,800-க்கு விலை கொடுத்து அவற்றை வாங்கினார்.

Nandri : http://erapaventhan.blogspot.com/

உலா: நீ குடும்ப விளக்கு; நீ மின்சார விளக்கு!


உலகத் தமிழர்கள் பெருமைப்படும் அளவுக்கு நடந்து முடிந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலிருந்து சில துளிகள்! பிரமாண்டமான நந்தி பக்கவாட்டில் வீற்றிருக்க,​​ கோயிலின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்குத்தான் மாநாட்டில் கூட்டம் அலைமோதியது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பழந்தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டப் பொருட்கள்,​​ சிந்துவெளி,​​ மொகஞ்சாதரோ,​​ ஹரப்பா போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்து வடிவங்கள்,​​ பழங்கால ஓலைச் சுவடிகள்,​​ போர்க்கருவிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கமுடிந்தது. கண்காட்சியினுள் ஒரு திருப்பத்தில் நம்மை வரவேற்கிறது ஒரு குகை மனிதனின் சிலை. இந்தச் சிலையை,​​ அருங்காட்சியகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருப்பவர் தோட்டா தரணி.



மொகஞ்சாதரோ,ஹரப்பா காலத்தைய கிணறு,​​ பழந்தமிழர்கள் வாழ்க்கை முறை போன்றவற்றைப் பற்றிய மாதிரி வடிவங்கள் நம்மை அந்தக் காலத்திற்கே பயணப்பட வைக்கின்றன. நமது தமிழ் நாட்டிற்கான விலங்கு- மான்,​​ மலர்- செங்காந்தள்,​​ பறவை-புறா,​​ மரம்-பனை என்பது போன்ற விளக்கங்களும் உள்ளன.


"தமிழால் முடியும்' என்னும் 200 கலை வார்த்தைகளுக்கு உரிய தமிழ் வார்த்தைகளை அடங்கிய பட்டியல்,​​ பொது,​​ அலுவலகப் பயன்பாடுகள்,​​ இணையம்,​​ பிணையம்,​​ தரவுத் தளம் என்னும் தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டிருந்தன. "பென் டிரைவ்' என்னும் ஆங்கிலப் பதத்திற்கான தமிழ் வார்த்தை- பேனா சேமிப்பகம்! (பேனாக்களைச் சேமித்து வைக்கும் இடம் என்று அர்த்தமாகிவிடாதா?)


செம்மொழி மாநாட்டுக்காக நடத்தப்பட்ட ஆய்வரங்கங்களில் சில அரங்குகளில் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க வந்தவர்களோடு உடன் வந்தவர்களும்,​​ அந்த அரங்கு நடப்பதற்காக உதவி செய்து கொண்டிருந்தவர்களும்,​​ ஒளிப்பதிவு செய்பவர்களும் மட்டுமே இருந்தனர்.

G.K. Moopanar, 1931-2001.

G.K. MOOPANAR, 70, who passed away in Chennai on August 30, will be remembered for his commitment to secularism and cultural pluralism. It was Moopanar's firm opposition to communalism and religious bigotry that motivated the Tamil Maanila Congress (TMC), which he founded in 1996, to vote against the confidence motion moved by the Bharatiya Janata Party-led government at the Centre in 1999 and break ranks with the Dravida Munnetra Kazhagam (DMK) when it allied with the BJP. In joining hands with the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) for the Tamil Nadu Assembly elections in May 2001, Moopanar seemed to signal that the BJP's "communalism" was a greater threat to the polity than the "corruption" of the AIADMK.

Moopanar was one of the two Congressmen who had direct connections with the Congress lineage of K. Kamaraj. (The other survivor is N. Ramasamy Udayar of Salem, who is in his 80s.)

Moopanar cut his political teeth under Kamaraj, who handpicked him to build up the Congress in Thanjavur district in 1965 when the Left movement and the DMK were rising. Moopanar was hardly 25 then.

Moopanar was a Congressman first and last. Although he broke away from the party in 1996 protesting against Prime Minister and Congress president P.V. Narasimha Rao's decision to align with the AIADMK, he was a Congressman at heart. Congress president Sonia Gandhi, who visited Chennai on August 31 to pay her last respects to Moopanar, claimed that "he never quit the Congress, and his heart was always with the Congress, " and that he was the "standard-bearer of the Congress flag" all his life.

Moopanar commanded the confidence of Indira Gandhi and Rajiv Gandhi. Between 1980 and 1988, when Moopanar was general secretary of the All India Congress Committee (AICC), both Indira Gandhi and Rajiv Gandhi sent him on several trouble-shooting missions. These included the displacement of certain Congress Chief Ministers, which he accomplished with finesse. He kept a low profile when the Congress was under the stewardship of Narasimha Rao, with whom he did not get on well.

A crusader against untouchability, Moopanar made the Puthiya Tamizhagam and the Dalit Panthers, the two Dalit parties, the TMC's allies in the Third Front that he formed to contest the Lok Sabha elections in 1999. He thus gave them the credibility denied by other mainstream political parties. Dalit Panthers convener R. Tirumavalavan recalled how during the campaign for the byelection to the Nellikuppam Assembly seat in February 2000, Moopanar asked a crowd at a public meeting "What do you have in your hands?" The people, waving pictures of their leader, replied, "Tirumavalavan". To this, Moopanar gave the riposte, "You have him on a piece of paper. But I have enshrined him in my heart." The crowd cheered.

N. Sankaraiah, secretary, the Tamil Nadu State Committee of the Communist Party of India (Marxist), writing in the September 1 issue of Theekathir (the CPI-M newspaper) about Moopanar's simple words against untouchability, quoted a speech he made at a convention in Neyveli that touched the core of the problem. Moopanar told the gathering: "All of you (Dalits and people belonging to other communities) watch films together in cinema halls. You travel together in buses. You work in work places without showing any differences. But once you return to your villages, you remember your castes and get engrossed in hatred and enmity. You fight one another. You should think whether this is right."

Former Chief Minister and DMK president M. Karunanidhi acknowledged the fire-fighting role that Moopanar played during the bloody caste clashes in southern Tamil Nadu in 1997.

Karunanidhi noted that his 40-year friendship with Moopanar was not affected by party-based or ideological differences. The former Chief Minister called him a humane person. "His love and affection for my family members will continue to linger in my heart," he said.

Chief Minister Jayalalithaa recalled how Moopanar never got angry or used harsh words, a "rare quality" among politicians. She added that when she met him in hospital in mid-August, he said, "we will take a joint decision on the coming local body elections."

R. Nallakannu, secretary, State Council, Communist Party of India (CPI), observed that although Moopanar was a religious person, he fought religious fanaticism.

It was reportedly at Moopanar's insistence that the Karunanidhi government banned Al Umma and the All-India Jihad Committee involved in the serial bomb blasts in Coimbatore in February 1998 which claimed more than 50 lives.

Moopanar was a heavy smoker for several decades but gave up the habit some time ago. Instead, he took to chewing betelnut and cloves. It was clear from January 2001 that his health was failing. Hectic parleying with the DMK, the AIADMK and other parties for several weeks before the Assembly elections in May 2001 put further strain on his health.

Moopanar's decision to partner the AIADMK attracted a measure of criticism since it seemed to go against the raison d'etre of the founding of the TMC: to fight the AIADMK. So much so that senior TMC leader P. Chidambaram parted ways with Moopanar and founded the TMC Democratic Front.

Moopanar was born on August 19, 1931 at Kabisthalam village in the composite Thanjavur district, the rice granary of Tamil Nadu. He belonged to a family of landed aristocracy that owned vast tracts of fertile land. His father R. Govindasamy Moopanar was a Congressman. The family patronised music, arts and literature. Moopanar himself was president of the Tiruvaiyaru Sri Thyaga Brahma Mahotsava Sabha from 1980 until his death. This Sabha conducts the annual Thyagaraja music festival at Tiruvaiyaru, the saint-composer's birthplace.

Moopanar first met Kamaraj and Jayaprakash Narayan when they called on his father Govindasamy Moopanar at his home at Sundaraperumal Kovil, near Kumbakonam, in 1951. Kamaraj was then TNCC president. Moopanar became the president of the Thanjavur district Congress committee in 1965. When the Congress split in 1969 Moopanar continued with Kamaraj. After Kamaraj's death on October 2, 1975, the two Congress factions in Tamil Nadu merged in 1976. At the merger function, Indira Gandhi announced that Moopanar would be the president of the unified TNCC.

From then onwards, his rise in the Congress was swift. He was TNCC president from 1976 to 1980, and again in 1988-89. He was a puissant AICC general secretary from 1980 to 1988. He was a Rajya Sabha member when he died. Both Indira Gandhi and Rajiv Gandhi offered him ministership but he declined.

He even shunned the Prime Minister's post offered to him in April 1997 after the fall of the United Front government led by H.D. Deve Gowda. In a volume titled Makkal Thalaivar Moopanar, published by a TMC leader in August 2000, former Union Minister R. Dhanushkodi Adityan has recalled that CPI(M) general secretary Harkishan Singh Surjeet declared that "Mr. Moopanar is the best and first choice" for the prime ministership. West Bengal Chief Minister Jyoti Basu seconded the choice. Moopanar declined the offer.

Moopanar's humility and amiability were striking qualities. He knew partymen at all levels by name. He supported the education of hundreds of poor students by paying their fees. He donated money for various good causes but never sought publicity for these acts. In the affairs of the Congress party, he was hard to fathom. He would never reveal his mind to anybody, especially to the media. His approach in the party was one of forging a consensus by holding protracted discussions. Ultimately, he did not realise his ambition of bringing back "Kamaraj rule" in Tamil Nadu.

The TMC feels orphaned with the death of Moopanar. The party quickly tried to steady itself when at a meeting of its legislators, Rajya Sabha members and leaders on September 1, Moopanar's son G.K. Vasan was elected TMC president.


திருச்சி நவ. 23: மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலை இருட்டடிப்பு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்திய அஞ்சல்துறை பொதுப் பயன்பாட்டுக்காக அஞ்சல்தலைகளை வெளியிடுகிறது. இதுதவிர, அரசியல் தலைவர்கள், வரலாற்றுச் சின்னங்கள், முக்கிய நிகழ்வுகளைச் சிறப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது, சிறப்பு அஞ்சல்தலைகளையும் வெளிட்டு வருகிறது.


பொதுப்பயன்பாட்டுக்கான அஞ்சல்தலைகள் நாடு முழுவதும் உள்ள 1,60,000 அஞ்சலகங்களில் கிடைக்கும். ஆனால், சிறப்பு அஞ்சல்தலைகள், தமிழகத்தில் உள்ள 5 அஞ்சலகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 72 சிறப்பு அஞ்சல் நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். பொதுவாக, சிறப்பு அஞ்சல்தலை வெளிடப்படும்போது, அஞ்சல்தலை, முதல் நாள் உறை, விளக்கக் குறிப்பு ஆகிய மூன்றும் வெளியிடப்படும்.


வெளியிடப்படும் நாளன்றே நாடு முழுவதும் உள்ள 72 அஞ்சலகங்களிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் வெளியிடப்படும் நாளன்றே அஞ்சலகங்களில் வாங்குவதை விரும்புவர்.ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலை தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே கிடைக்கவில்லையாம்.இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் கூறியது: "தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் சிறப்பு அஞ்சல்தலை ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது.


அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது.இந்த இரண்டு சிறப்பு அஞ்சல்தலைகள், வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்திலும், கேரளத்திலும் கிடைக்கவில்லை. இன்னும் வரவில்லை என அஞ்சலக அதிகாரிகள் கூறுகின்றனர்' எனத் தெரிவித்தனர்.அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக மூப்பனாரின் அஞ்சல்தலைகள் அஞ்சலங்களில் விற்கப்படாமல் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகம், கேரளம் தவிர மற்ற மாநிலங்களில் எளிதாகக் கிடைக்கிறது.மேலும், ஜி.கே. மூப்பனாரின் அஞ்சல்தலை வெளியீட்டுக்கு முன்பு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மறைந்த ஒய். ராஜசேகரரெட்டியின் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.அந்த அஞ்சல்தலை ராஜசேகர ரெட்டியின் அழகான புகைப்படத்துடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மூப்பனாரின் அஞ்சல்தலையில் அவரது உருவப்படம் தெளிவில்லாமல் இருக்கிறது.எனவே, மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலையை இருட்டடிப்பு செய்வதற்காகத்தான் இதுபோல செய்யப்பட்டுள்ளது என்ற புகார்கள் எழுந்துள்ளன.


இதுகுறித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக் குழு உறுப்பினர் புலியூர் . நாகராஜன் கூறியது: "மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்பட்டவர். எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர். பிரதமர் பதவியே தேடி வந்தபோது அதை நிராகரித்தவர். பல பிரதமர்களை உருவாக்கியவர். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது பாராட்டத்தக்கது. ஆனால், அந்த அஞ்சல்தலை மூப்பனாரின் சொந்த மாநிலமான தமிழகத்திலேயே கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது' என்றார் நாகராஜன்.எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலைகள் தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினர், அஞ்சல்தலை சேகரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு.


வரும் தேர்தலில் உங்களுடைய ஓட்டு இந்த கூட்டணிக்கு?

Our Google

Your browser does not support iframes.

மொத்தப் பக்கக்காட்சிகள்

Visitors

free counters

Menu

Menu By (C)Moopanar.com

Parkavan Murasu

Parkavan Murasu
Magazine for Moopanar

நன்றி (Thank you)

எங்கள் வலைப்பதிவை தாங்கள் பார்வையிட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களுடைய கருத்துகளையும் வலைபதிவில் செய்யவேண்டிய மாற்றங்களையும் மறக்காமல் எங்களுக்கு தெரியபடுத்துங்கள். நன்றி. Thank you very much for your visit to our blog. Kindly write your valuable comments and advice to imporve the blog. Thank you. E-mail : moopanar.community@gmail.com

Chat with us

Protect

myfreecopyright.com registered & protected

பார்வையிட்டவர்கள்

வந்து சென்ற உறவுகள்

மூப்பனார் (பார்க்கவகுலம்)

Our Twitter

Our Google Group

Google Groups
Subscribe to Parkavakulam Moopanar (பார்க்கவகுல மூப்பனார்) Community
Email:
Visit this group

Our Yahoo Group

Subscribe to moopanar_community

Powered by in.groups.yahoo.com