அன்பு உறவுகளுக்கு,
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"தமிழைப் பொறுத்தவரை ஏ.கே. செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படம் முக்கியமானது. 1937 முதல் 1942 வரை செட்டியார் எடுத்த இந்தப்படமே இந்திய அளவிலும் முதல் முழுமையான ஆவணப்படம்னு சொல்லலாம். இந்தப் படத்துக்காக வெளிநாடுகள் போய் பல தலைவர்களைப் பார்த்து அவர்களை பேட்டி கண்டிருக்கிறார். இந்தப் படத்தோட ஆங்கில பிரதிதான் நம்மகிட்ட இருக்கு. தமிழ் மூலம் இதுவரை கிடைக்கலை. பிரன்சில் படித்த ஏ.வி. பதி 1937-ல் 'இந்தியன் பேந்தர்' ங்கிற ஆவணப்படம் எடுத்தார். ஜெர்மனை சேர்ந்த பால் சீசிஸ் என்பவர்தான் இந்தியாவில் ஆவணப்படம் உருவாக ஆரம்பகாலத்தில் காரணமாக இருந்திருக்கிறார். இவர் ஏ.வி. பதியோட நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தஞ்சாவூரில் நிறைய வெள்ளைக்காரங்க இருந்திருக்காங்க. அவங்க மூலமா புகைப்பட கலை தஞ்சாவூர்வாசிகளுக்கு பரிட்சயமாகியிருக்கு. அதில் முக்கியமானவர் ஆபிரஹாம் பண்டிதர். 1850-ல யிருந்து 1917 வரை இவர் பல்வேறு ஆவணப்படங்களை எடுத்திருக்கார். இவர் தன்னோட மகன் ஜோதிபாண்டியனை அப்போதே ஜெர்மனிக்கு கேமரா பற்றி படிக்க அனுப்பி வச்சிருக்கார். இவர்கிட்ட புகைப்பட கலையை கற்றுகிட்டவர் மருதப்ப மூப்பனார். இவர் விமானம் தரையிறங்குகிறதையெல்லாம் படமாக்கியிருக்கார். 1905-ல் டெல்லியில் 5-ம் ஜார்ஜ் மன்னனுக்கு விழா நடத்தியபோது அதை இவர் படமெடுத்திருக்கார். 1910-களில் சென்னை வேப்பேரியைச் சேர்ந்த ஜோசப்ங்கிறவர் கீரிப்பிள்ளை சண்டை மாதிரியான விஷயங்களை படமெடுத்து பணத்துக்கு வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்றிருக்கிறார். இவையெல்லாம் வாய்மொழி வரலாறாகதான் இருக்கு. ஆவணப்படங்கள் எதுவும் இப்போது நம்மகிட்ட இல்லை. ஏ.கே. செட்டியாரின் காந்தி பற்றிய படம்தான் நம்மிடம் இருக்கும் பழமையான முழுமையான ஆவணப்படம். * ஆவணப்படுத்துவது என்பது தமிழர்களிடம் அரிதாக காணப்படும் விஷயம். இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். ஆவணப்பட விஷயங்களில் நாம் இழந்தவை பற்றி கூற முடியுமா? தமிழில் வண்ண திரைப்படம் 1956-ல் தான் அறிமுகமாகுது. அதுக்கு முன்பே வண்ணத்தில் ஆவணப்படம் எடுத்திருக்காங்க. நான் நண்பர் ஒருவரோட வீட்டுக்கு போனபோது அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி நிறைய ஆவணங்கள் சேர்த்து வைத்திருந்தார். அதில் பர்மா விஜயம்ங்கிற பெயர்ல ஒரு படச்சுருள் இருந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பர்மா போனதை யாரோ படம் எடுத்திருக்காங்க. 1952-ல் எடுக்கப்பட்ட அந்தப் படம் வண்ணத்தில் இருந்தது. படம் நன்றாக இருந்தாலும் ஆடியோ நாசமாகியிருந்தது. ஒலி கிடையாது. அதேமாதிரி பெரியாரோட ஒருநாள் வாழ்க்கையை 'செம்மீன்' இயக்குனர் ராமு காரியத் ஆவணப்படமா எடுத்திருக்கார். ராமு காரியத் கேரளாவின் வைக்கத்தை சேர்ந்தவர். பெரியார் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியதால் பெரியார் மேல அவருக்கு ஓர் ஈடுபாடு. அந்த ஆவணப்படத்தை தேடி தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பல இடங்களுக்கு அலைஞ்சும் பலன் பூஜ்ஜியம் தான். படச்சுருள் எங்கே போனதுன்னே தெரியலை. மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தன்னையே ஆவணப்படமா எடுத்திருக்கார். அவர் ஸ்டுடியோவுக்குள் நுழையுறது, வேலையாட்களுக்கு வேலையை பிரிச்சு கொடுப்பது, ஸ்டுடியோ லைட்ஸ் ஆன் செய்வதுனு அவரோட ஸ்டுடியோ வேலைகளை படமாக்கியிருக்கார். கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடை ஈழத்தைச் சேர்ந்த சுவாமி சேவியர் தனிநாயகம் அடிகள் படமெடுத்தார். இவையெல்லாம் இன்றைக்கு நம்ம கையில் இல்லை. நாம ஆவணப்படுத்தாமல் சரித்திரத்தில் நழுவவிட்டவை இவை. முழுநீள சினிமாவில் ஆவணப்படங்களை சேர்த்து திரையிடுற வழக்கம் முன்பு இருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸின் 'கஞ்சன்' படத்தில் காந்தி பழனி கோயிலுக்கு வந்ததை படமெடுத்து படத்தோடு இணைச்சு திரையிட்டாங்க. விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க. மாநாடை படமெடுத்து, அதனை தான் பார்ப்பதுபோல் 'தங்கரத்னம்' படத்தில் எஸ்.எஸ். ஆர். பயன்படுத்தியிருப்பார்."[1]
Nandri : http://ta.wikipedia.org/
Nandri : http://erapaventhan.blogspot.com/
உலா: நீ குடும்ப விளக்கு; நீ மின்சார விளக்கு!
உலகத் தமிழர்கள் பெருமைப்படும் அளவுக்கு நடந்து முடிந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலிருந்து சில துளிகள்! பிரமாண்டமான நந்தி பக்கவாட்டில் வீற்றிருக்க, கோயிலின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்குத்தான் மாநாட்டில் கூட்டம் அலைமோதியது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பழந்தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டப் பொருட்கள், சிந்துவெளி, மொகஞ்சாதரோ, ஹரப்பா போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்து வடிவங்கள், பழங்கால ஓலைச் சுவடிகள், போர்க்கருவிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கமுடிந்தது. கண்காட்சியினுள் ஒரு திருப்பத்தில் நம்மை வரவேற்கிறது ஒரு குகை மனிதனின் சிலை. இந்தச் சிலையை, அருங்காட்சியகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருப்பவர் தோட்டா தரணி.
மொகஞ்சாதரோ,ஹரப்பா காலத்தைய கிணறு, பழந்தமிழர்கள் வாழ்க்கை முறை போன்றவற்றைப் பற்றிய மாதிரி வடிவங்கள் நம்மை அந்தக் காலத்திற்கே பயணப்பட வைக்கின்றன. நமது தமிழ் நாட்டிற்கான விலங்கு- மான், மலர்- செங்காந்தள், பறவை-புறா, மரம்-பனை என்பது போன்ற விளக்கங்களும் உள்ளன.
"தமிழால் முடியும்' என்னும் 200 கலை வார்த்தைகளுக்கு உரிய தமிழ் வார்த்தைகளை அடங்கிய பட்டியல், பொது, அலுவலகப் பயன்பாடுகள், இணையம், பிணையம், தரவுத் தளம் என்னும் தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டிருந்தன. "பென் டிரைவ்' என்னும் ஆங்கிலப் பதத்திற்கான தமிழ் வார்த்தை- பேனா சேமிப்பகம்! (பேனாக்களைச் சேமித்து வைக்கும் இடம் என்று அர்த்தமாகிவிடாதா?)
செம்மொழி மாநாட்டுக்காக நடத்தப்பட்ட ஆய்வரங்கங்களில் சில அரங்குகளில் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க வந்தவர்களோடு உடன் வந்தவர்களும், அந்த அரங்கு நடப்பதற்காக உதவி செய்து கொண்டிருந்தவர்களும், ஒளிப்பதிவு செய்பவர்களும் மட்டுமே இருந்தனர்.