அரியலூர்: அரியலூரில் நடந்த தமிழ்நாடு பார்க்கவகுல மூப்பனார் சங்க முப்பெரும் விழாவுக்கு, சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் நானாங்கூர் சம்பந்தம் வரவேற்றார்.சங்கத்தின் 26வது ஆண்டு மலரை வெளியிட்டு, மாநில, மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கி, தேசிய மற்றும் மாநில அளவில் விருது பெற்றவர்களை பாராட்டி சால்வை அணிவித்து, சங்கத்தின் மாநில தலைவர் இளம்வழுதி பேசினார்.
கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள ஒட்டுமொத்த பார்க்கவ குல சமுதாயத்தை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கல்வி கடன் வழங்குவது மற்றும் விவசாய கடன் வழங்குவதில் பொதுமக்களை அலைக்கழித்து அலைய விடுவதுடன், கிராமபுற முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும், சில தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்களின் அலட்சிய போக்கை வன்மையாக கண்டிப்பது.மருதையாறு அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ராமு, ஒன்றிய தலைவர்கள் ராஜாங்கம், கரிகாலன், குமரேசன், வக்கீல் செல்வராஜ், வல்லக்குளம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாநில பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.
Nandri : www.dinamalar.com
Rama.Sreedharan சொன்னது…
very good ! fantastic Up date !